சவுதி அரேபியாவில் இருந்து பாய்ந்து சென்றால் 4 இலட்சம் அபராதம்

சவுதி அரேபியாவில் பணிபுரியும் சகலருக்கும் புதிய சட்டதிட்டங்கள் அந்நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய சவுதியில் தொழில் செய்யும் பணியாளர்கள் தாம் பணிபுரியும் இடங்களில் இருந்து தொழிலாளர் அனுமதிப்பத்திரத்துடன் சட்டவிரோதமாக பாய்ந்து சென்று மீண்டும் தமது சொந்த நாடுளுக்கு திரும்புவதன் பொருட்டு அதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற 4 இலட்சம் தண்டப் பணம் செலுத்த வேண்டும் என்பதே அந்தப் புதிய சட்டமாகும்.

குறித்த பணத்தினை செலுத்தினால் மாத்திரமே அவர்கள் தாயகம் திரும்புவதற்கான அனுமதி வழங்கப்படும் என சவுதியின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய சட்டமானது சகல நாட்டினரையும் உள்ளடக்கும் வகையில் இந்த மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

எனவே சவுதியில் பணிபுரியும் சகல பணியாளர்களுக்கும் இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படும் என சவுதியில் உள்ள இலங்கைத்தூதுவராலயம் அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.