புத்தளத்தில் 4 வயது சிறுவனை கடத்திய யாசகம் கேட்க வந்த - பெண் பெற்றோர்களே உஷார்!

புத்தளம் பிரதேசத்தில் 4 வயது சிறுவன், இனந்தெரியாத பெண்ணால் கடத்திச் செல்லப்பட்டிருந்த செய்தி நேற்று ஊடகங்களில் வெளியாகியிருந்தமையை வாசகர்கள் அறிவீர்கள்.

முஹம்மது ஹுசைன் என்பவரின் மகனான முஹம்மது பாதிர் என்ற சிறுவனே இவ்வாறு கடத்தி செல்லப்பட்டிருந்தார்.

யாசகம் கேட்பதற்காக வந்த பெண், சிறுவனை இறுக அணைத்து தூக்கிச் சென்றதாக குறித்த சிறுவனின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் மற்றுமொரு பெண் குறிப்பிட்டிருந்த நிலையில் யாசகம் வாங்க வந்ததாக கூறப்படும் பெண்மணியோடு சேர்ந்து வந்த 20 வயது மதிக்கத்தக்க யுவதி,  புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட யுவதியிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள புத்தளம் பொலிஸார், ஆறு விஷேட பொலிஸ் குழுக்கள் மூலம்  நடத்திய தேடுதல் வேட்டையில் முச்சக்கர வண்டி ஒன்றில் குறித்த சிறுவனை கொண்டு சென்ற போது பொலிஸார் சிறுவனை மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் தொடர்புடைய இருவரை பொலிஸார் கைது செய்து விசாரனைசெய்து வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்களிடம் குழந்தைகளை மயக்கமடைய செய்யும் இனிப்பு வகைகளும் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.