கொழும்பில் இன்று ஐ.தே.க 70வது மாநாடு! களைகட்டியுள்ள கெம்பல் மைதானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது மாநாடு இன்று சனிக்கிழமை கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டை கோலாகலமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் வெகு விமர்சையாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாநாடு இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு அதிதியாக கலந்துகொள்வாரென தெரிய வருகிறது.
ஐ.தே. க வின் 70 வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதுமிருந்து ஐ. தே.க ஆதரவாளர்கள் இன்று கொழும்பு கெம்பல் மைதானத்திற்கு வருகை தரவுள்ளனர்.
கட்சி சார்ந்த இளைஞர் அமைப்பு, பெண்கள் அமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இம்மாநாட்டில் பங்கெடுக்கவுள்ளனர்.
இதேவேளை, இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள விசேட அதிதிகள் மற்றும் ஆதரவாளர்களின் வருகை காரணமாக இன்று காலை 6 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரையில் பொரள்ளை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியெங்கும் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்படும் என்பதனால் சாரதிகள் மாற்று வழிகளை கையாள வேண்டுமென பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் மாநாட்டிற்கென திட்டமிட்டு ஆதரவாளர்களை திரட்டும் முயற்சியை ஐ. தே. க முன்னெடுக்கவில்லை என்றும் வழமைக்கும் மாறாக பெருமளவிலான கூட்டம் கெம்பல் மைதானத்துக்கு வருகை தரும் என்ற நம்பிக்கை கட்சிக்கு இருப்பதாகவும் ஐ. தே. க பேச்சாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் இல்லாதபோது கூட ஐ. தே. க 50 வது மாநாட்டை வெகு விமர்சையாக முன்னெடுத்திருந்தது.
அந்த வகையில் தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் கட்சியின் 70வது மாநாட்டை முன்னொரு போதும் இல்லாத வகையில் வெகு விமர்சையாக நடத்துவதற்கு கட்சி எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.