கல்லறையில் பெண் சத்தம் போட்டதால் தோண்டி எடுத்த காதலன்

அமெரிக்காவில் காதலி உயிரோடு இருப்பதாக கருதி கல்லறையை உடைத்த காதலனனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்த காரணத்தினால், அவரது குடும்பத்தினர் La Entrada பகுதியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்துள்ளனர்.
கல்லறையில் அடக்கம் செய்த பகுதிக்கு சென்ற அப்பெண்ணின் காதலன், கல்லறையில் புதைக்கப்பட்ட பெண் சத்தமிடுவதாக கூறியுள்ளார். இதனால் அவர் பெண்ணின் குடும்பதாரிடம் சென்று உங்கள் பெண் உயிரோடு இருப்பதாகவும், தொடர்ந்து சத்தமிடுவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் மகள் உயிரோடு இருப்பதாக கருதி பெற்றோர்கள் மற்றும் அங்கிருந்த சிலர் கல்லறையை உடைத்தனர். சவப்பெட்டியில் இருந்த பெண்ணை எடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார் என தெரிவித்தனர். மேலும் இது காதலனுடைய கற்பனை என்றும் மருத்துவர்கள் கூறினர்.
அதன் பின் அப்பெண்ணின் குடும்பத்தினர் மீண்டும் இறுதிசடங்கு செய்து உடலை அடக்கம் செய்தனர்.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.