ஒரு தலை காதலில் புதுப்பெண்ணை கொலை செய்த வாலிபருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் சோமு(வயது 52). இவர்களது மகள் தன்யா (23) பொங்கலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
இவரை, அதேபகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்த திருப்பூரை சேர்ந்த ஜாகீர்(27) என்பவர் ஒரு தலையாக காதலித்தார். தன்யாவிடம் ஜாகீர் காதலை கூறிய போது அவர் ஏற்க மறுத்தார். கடந்த 10 நாட்க ளுக்கு முன்பு தன்யாவுக்கு அன்னூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் தினேஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த மாதம் இவர்களது திருமணம் நடக்க இருந்தது. இதையறிந்த ஜாகீர் ஆத்திரம் அடைந்தார்.
அவர் நேற்று முன்தினம் வீட்டுக்குள் புகுந்து தன்யாவை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இங்கிருந்து தப்பி ஓடிய ஜாகீர் சொந்த ஊரான பாலக்காட்டுக்கு சென்று சாணிப் பவுடரை கரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றதும், அவரை உறவினர்கள் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பாலக்காடு விரைந்து சென்று ஜாகீரை கைது செய்தனர். இந்த நிலையில் ஜாகீரின் உடல் மஞ்சள் நிறத்தில் மாறியது. எனவே அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படி டாக்டர்கள் கூறினர்.
அதன்பேரில் மேல்சிகிச் சைக்காக ஜாகீரை நேற்று மாலை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சிகிச்சை பெறும் வார்டு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் எட்வின் ஜோ கூறியதாவது:-
ஜாகீர் அவ்வப்போது கண் விழித்து பார்க்கிறார். அவரால் எதையும் பேச முடியவில்லை. உடல் முழுவதும் மஞ்சள் பரவி உள்ளது. எனவே அவரது உடல் நிலை குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம்.
இதற்கிடையே, தன்யா உடல் நேற்று பிரேதபரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடலை அன்னூர் கொண்டு சென்று தகனம் செய்தனர்.
இதுகுறித்து தன்யாவின் உறவினர்கள் கூறுகையில், தன்யாவை இழந்து தவித்து வருகிறோம். கொலையாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற கொடூரம் இனிமேல் நடைபெறாமல் தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.