மஹிந்த மீது மைத்திரிக்கு புதிய பயம் - செல்வாக்கை இழக்கிறார் ரணில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து தற்பொழுது பின்வாங்கிக் கொண்டிருக்கின்றார் என விமர்சனங்கள் மேல் எழுந்து கொண்டிருக்கின்றன.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து தான் ஜனாதிபதி வேட்பாளராக களத்திற்கு வந்தார் ஜனாதிபதி மைத்திரி.
எனினும் அவர் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து இப்பொழுது பின்வாங்கிச் செல்கின்றார் என்பதை உணரமுடிகின்றது.
தேர்தல் பிரசாரத்தின் போது, ஆட்சி ஏற்ற பின்னர் தன்னுடைய 100 நாள் திட்டத்தின் மூலமாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை நீக்கி, நாட்டில் நாடாளுமன்றத்திற்கான அதிகாரங்களைக் கொண்டுவருவேன் என வாக்குறுதியளித்திருந்தார்.
ஆனால் தற்பொழுது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவே அவர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.
இதற்கு அவர் சொல்லும் காரணம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை நீக்கினால், அது முன்னாள் ஜனாதிபதியும், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்சவிற்கு தான் அதிக நன்மை என்றும், அதனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை நீக்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருக்கின்றார்.
முன்னதாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை நீக்குவேன் என மைத்திரி அறிவித்த போது, அது சிறந்த முடிவு என்றும், தவறான முடிவு என்றும் நாட்டில் பல தரப்பினரும் கருத்து வெளியிட்டிருந்தார்கள்.
ஆனாலும் இந்த அறிவிப்பை சர்வதேச சமூகம் வரவேற்றிருந்தது. நாட்டில் ஜனநாயகம் மலரும் என்று பல அரசியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டிருந்தனர்.
எனினும் அது இப்பொழுது பொய்ப்பித்து போகும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஜனநாயக விரும்பிகள் கவலை தெரிவித்து வருகின்றார்கள்.
குறிப்பாக, நாட்டில் ஜனநாயகத்தை கொண்டுவருவேன் என்று ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன, இப்பொழுது மகிந்த ராஜபக்சவிற்கு பயந்து தன்னுடைய கடமைகளில் இருந்து பின்வாங்குகின்றார் என்பது தான் நாட்டு நலனில் அக்கறை கொண்டுள்ளோரின் கருத்தாக அமைந்திருக்கின்றது.
இதுவொருபுறமிருக்க, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்படக்கூடாது என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க முன்னதாக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துவந்திருக்கின்றார்.
ஆனாலும், பௌத்த பிக்குகளும், முக்கிய ஆய்வாளர்களும், நாட்டில் ஜனாதிபதியிடம் அதிகாரம் குவிந்து கிடப்பது நல்லதல்ல என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது தற்பொழுதைய நிலைப்பாடு.
மற்றொருபுறத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இவ்வாறு பிரதமருக்கான செல்வாக்கு அந்தக் கட்சியில் குறைந்து கொண்டு இருக்கும் பொழுது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை நீக்கினால் அது நாடாளுமன்றத்தில் அதிகாரங்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்சவிற்கு தான் அதிக நன்மையினைப் பெற்றுக் கொடுக்கும் என்னும் அச்சத்தினால் தற்பொழுது இந்த முறையில் மாற்றம் வராது என உறுதியாக நம்பப்படுகின்றது.
அதற்கான விவாதம் நாடாளுமன்றத்திற்கு வந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அமைதி காக்க வேண்டும் என ஜனாதிபதி கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்களிடம் கேட்டுள்ளதாகவும், தகவல்கள் கசிந்துள்ளன.
எது எவ்வாறெனினும், அடுத்த முறை தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை. எந்த தடை வந்தாலும், எவ்வாறான அச்சுறுத்தால் வந்தாலும் நிறைவேற்று முறையிலான அதிகாரத்தை நீக்குவேன் என்னும் கோசத்தோடு ஆட்சிப் பீடம் ஏறிய மைத்திரி, இப்பொழுது மகிந்த ராஜபக்ச மீது கொண்ட அச்சத்தினால் பின்வாங்குவது அவர் மீதான நன்மதிப்பை குறைப்பதாக அமைகின்றது என்கிறார்கள் விமர்சகர்கள்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.