பயன்பாட்டிற்கு வருகிறது : உலகின் முதல் ஓட்டுனரில்லாத சிற்றூந்து

ஓட்டுனரில்லாத சிற்றூத்து சேவையை இந்த வார இறுதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிரான்ஸ் அறிமுகப்படுத்துகிறது.
பிரான்சின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Lyon நகரில் இருந்து முதன் முறையாக இந்த சிற்றூந்து சேவை துவங்க உள்ளது.
சுமார் ஓராண்டுக்கும் அதிகமாக சோதனை ஓட்டம் பார்க்கப்பட்ட பின்னர் தற்போது முதன் முறையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனுமதி வழங்கியுள்ளனர்.
மின்சாரத்தால் இயங்கும் இந்த சிற்றூந்தில் ஒரே நேரத்தில் 15 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். மட்டுமின்றி மணிக்கு 20 கிலோ மீற்றர் வேகத்தில் இந்த சிற்றூந்து பயணிக்கும் எனவும் கூறப்படுகிறது.
தற்போது 10 நிமிடங்கள் மட்டுமே பயணிக்கும் தூரத்தில் இதன் தடத்தை வடிவமைத்துள்ளனர். மட்டுமின்றி இந்த 10 நிமிட பயணத்தில் 5 இடங்களில் பேருந்து நிறுத்தமும் ஏற்படுத்தியுள்ளனர்.
பிரான்சின் Navya என்ற நிறுவனத்தின் கட்டுமானத்தில் வெளி வந்துள்ள இந்த சிற்றூந்து சுமார் 200,000 யூரோ மதிப்பில் நிறுவப்பட்டுள்ளது.
பிரான்சின் பல்வேறு நகரங்களில் இதன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.