வரலாற்றில் முதல் முறையாக நியூசிலாந்து செல்லும் இலங்கை பிரதமர்

மூன்று நாட்கள் பயணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தமாதம் முதலாம் நாள் நியூசிலாந்து செல்லவுள்ளார். நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இதனை அறிவித்தார்.

இலங்கை பிரதமர் ஒருவர் நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் வளர்ச்சியில் இந்தப் பயணம் முக்கியமானதொரு படிக்கல்லாக அமையும் என்றும் நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதடருடன் நான்கு அமைச்சர்களும், வர்த்தக மற்றும் ஊடக குழுக்களும் நியூசிலாந்து செல்லவுள்ளன.

நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ கடந்த பெப்ரவரி மாதம் 1ஆம் நாள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.