கிரியுல்ல- நாரம்மல வீதி விபத்தில் இளைஞர் பலி

குரு­ணாகல் , கிரி­யுல்ல – நாரம்­மல வீதியில் நேற்று இடம்­பெற்ற வாகன விபத்தில் 20 வய­தான இளைஞர் ஒருவர் உயிாிழந்­துள்ளார்.
கிரி­யுல்ல – நாரம்­மல பாதையில் ஹமன்­கல்ல என்ற இடத்தில் நிறுத்­தப்­பட்ட பஸ் வண்­டியின் மீது மோட்டார் சைக்கிள் மோதி­ய­தில் மோட்டார் சைக்­கிளை செலுத்­தி­யவர் உயிாிழந்­துள்ளார்.
இவர் தம்­ப­தெ­னி­யாவைச் சேர்ந்த இளை­ஞ­ராவார். விபத்தில் கடும் காய­ம­டைந்து தம்­ப­தெ­னிய வைத்­திய சாலையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் சிகிச்சை பல­னின்றி உயிாிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.