பசு மாடுகளை திருடியவரை மடக்கிப் பிடித்து பொலிஸில் ஒப்படைப்பு, ஏனையோருக்கு வலைவீச்சு - புத்தளம் பனையடிச்சோலையில் சம்பவம்

பாலாவி நிருபர்
பன் நெடுங்காலமாக புத்தளம், அக்கரைப்பற்று பிரதேசத்தில் கால்நடைகள் திருட்டு நடைபெற்ற வண்ணமுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு (03) பாலச் சோலைப் பிரதேசத்தில் வைத்து பசுவும் 4 மாத கண்றும் திருடப்பட்டதை அடுத்து பிரதேசவாசிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டள்ளனர்.
அதன்போது பனையடிச் சோலை (வெட்டுக்காடு) பகுதியில் குறித்த மாட்டை அறுத்துக்  கொண்டிருந்த நிலையில் ஒருவர் சிக்கியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பியோடியுள்ளனர். பிடிபட்ட நபர் நையப்புடைக்கப்பட்டு முந்தல் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் புத்தளம், பனையடிச்சோலை இறைச்சிக் கடையில் வேலைபார்க்கும் ரனீஸ் என்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக  செய்தியாளர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.