தாஜுடீன் படுகொலை : CCTV காட்சிகள் தெளிவில்லை என கனடா அறிவிப்பு

ரக்பி வீரர் வசீம் தாஜுடீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக ஆய்விற்காக கனடாவிற்கு அனுப்பப்பட்டிருந்த சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் தெளிவற்று காணப்படுவதாக கனேடிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தமக்கு கிடைத்த காணொளி தொடர்பில் தீர்மானமொன்றுக்கு வரமுடியாதுள்ளதாக, பிரிட்டிஸ் கொலம்பியாவிலுள்ள ஆய்வுகூட நிபுணர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
குறித்த சி.சி.ரி.வி காணொளியை ஆய்வு செய்த கனேடிய ஆய்வு நிறுவனம் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், காணொளியின் தரம் மிகவும் குறைவாக காணப்படுவதாகவும் அதிலுள்ள காட்சிகள் தெளிவற்று உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
சி.சி.ரி.வி காணொளிகள் அடங்கிய 10 இறுவெட்டுக்களையும் அது தொடர்பான 36 கேள்விகளையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கனேடிய ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பியிருந்த நிலையில், அவர்கள் இவ்வாறு அறிக்கையிட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.