கணவனின் துஷ்பிரயோக அச்சுறுத்தலால் மனைவி தற்கொலை முயற்சி - காலியில் சம்பவம்

காலி – கலேகான பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில், தனது குழந்தையுடன் பேருந்தில் முன் பாய்வதற்கு முற்பட்ட போது காலி நகர சபை பணியாளர்கள் சிலர் அவரை காப்பாற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தனது கணவரால் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் துஷ்பிரயோக அச்சுறுத்தல் தாங்கமுடியாமல் இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னரும் அந்த பெண் தற்கொலை செய்ய முற்பட்டுள்ளதுடன், அருகில் இருந்த சிலர் அவரை காப்பாற்றியுள்ளனர்.
குறித்த கணவருக்கு எதிராக இதற்கு முன்னர் அந்த பெண் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதன்போது குறித்த கணவரிடம், அந்த பெண் இருக்கும் வீட்டுக்கு செல்ல வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த ஆலோசனையை மீறி அந்த கணவர் மீண்டும் அந்த வீட்டுக்கு சென்று அந்த பெண்ணையும் அவரது தாயாரையும் சித்திரவதை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகவே அவர் இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதன் பின்னர் சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவனை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.