மற்றுமொரு வர்த்தகரை கடத்திச் செல்லும்போது பொலிஸாரால் மீட்பு

பாணந்துறை பகுதியில் வாகனமொன்றில் வர்த்தகர் ஒருவரை கடத்தி சென்று கொண்டிருக்கும் வேளையில் பண்டாரகம பொலிஸாரினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வர்த்தகர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பண்டாரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் மேலதிக விசரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.