கர்நாடகா: காருக்குள் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சி, காட்டிற்குள் ஓடி தப்பித்த முஸ்லிம் குடும்பம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த நவாஸ்பாஷா என்பவரின் தம்பி மனைவி பிரசவத்திற்காக சொந்த ஊரான கர்நாடகாவின் மாண்டியாவிற்கு சென்றுள்ளார். அவரை பார்ப்பதற்காக கடந்த 11 ஆம் தேதி உறவினர்களுடன் நவாஸ்பாஷா சென்றிருந்தார்.
மறுநாள் நவாஸ்பாஷா உள்ளிட்டோர் காரில் தமிழகம் திரும்பி கொண்டிருந்தனர். மாண்டியாவின் புறநகர் பகுதியில் உள்ள நந்தினி பால் டிப்போ அருகில் வந்தபோது, கலவர கும்பல் காரில் இருந்தவர்களை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றுள்ளனர்.
இதில் பதறியடித்து வெளியேறிய நவாஸ்பாஷா மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர், காட்டுக்குள் தப்பியோடி உயிர் பிழைத்தனர். பின்னர் பல்வேறு சோதனைகளுக்கு இடையில் ரயில் மூலம் தப்பித்து அவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
நவாஸ்பாஷா பின் வருமாறு தர்மபுரியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்:
தம்பி மனைவி பிரசவத்திற்காக சொந்த ஊரான கர்நாடகாவின் மாண்டியாவிற்கு சென்றிருக்கிறார். அவரை பார்ப்பதற்காக கடந்த 11-ந் தேதி உறவினர்களுடன் நானும் சென்றிருந்தேன். மறுநாள் நாங்கள் காரில் தமிழகம் திரும்பி கொண்டிருந்தோம். அப்போது மாண்டியாவின் புறநகர் பகுதியில் உள்ள நந்தினி பால் டிப்போ அருகில் எங்கள் கார் வந்தது.
திடீரென ஒரு கும்பல் நாங்கள் வந்த காரின் தமிழக பதிவு எண்ணை பார்த்துவிட்டு அப்படியே பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்தது. இதனால் பதறியடித்து நாங்கள் வெளியேறி அருகே இருந்த காட்டுக்குள் ஓடினோம். பின்னர் பல்வேறு சிரமங்களுக்கு இடையே ரயில் மூலம் தப்பித்து சொந்த ஊர் திரும்பியுள்ளோம். நாங்கள் இழந்த கார் மற்றும் உடமைகளுக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளோம்.
காவிரி பிரச்சனை தொடர்பான வன்முறைகளுக்கு பிஜேபி தான் காரணம் என தனியார் தொலைக்காட்சி நிகழச்சி ஒன்றில் பெண் ஒருவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.