புத்தர் சிலைகளை உடைத்தமைக்கு எதிராக விசாரணை வேண்டும் - அஸ்கிரிய தேரர்

கிளிநொச்சி பகுதியில் இனந்தெரியாத நபர்களால் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டமைக்கு அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அஸ்கிரிய மகா நாயக்க வரக்காகொட ஞானரத்ன தேரர், அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமைச்சர் பைஸர் முஸ்தபா கண்டி சென்றிருந்த போதே தேரர் இதனை கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பைஸர் முஸ்தபா,
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும், இவ்வாறான செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அண்மையில், மாங்குளத்தில் அமைந்துள்ள கனகராயன்குளம் பகுதியில் இருந்த பல புத்தர் சிலைகள் அழிவுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.