ஆதரவு மைத்திரிக்கா அல்லது மஹிந்தவுக்கா என்பது நாளை தெரிந்துவிடும்

சுதந்திரக் கட்சியின் சம்மேளனத்தைப் புறக்கணிக்கும் அரசியல்வாதிகளை பொதுமக்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் 65வது வருடாந்த சம்மேளனம் நாளைய தினம் குருநாகலையில் நடைபெறவுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சம்மேளனத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க,
நாளைய தினம் குருநாகலையில் நடைபெறும் சுதந்திரக் கட்சியின் பொதுச் சம்மேளனத்தில் கட்சியின் அடிமட்ட ஆதரவாளர்களின் ஆதரவு மைத்திரிக்கா அல்லது மஹிந்தவுக்கா என்பது தெரிந்துவிடும்.
கட்சியின் பெரும்பாலான ஆதரவாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனேயே இருக்கின்றனர்.
அவர்கள் யாரும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தவை ஆதரிக்கவில்லை.
நாளை குருநாகலில் கூடும் சனக்கூட்டம் அதனை நிரூபிக்கும்.
அதே போன்று இந்த பொதுச் சம்மேளனத்தை பகிஷ்கரிக்கும் அரசியல்வாதிகள் குறித்தும் நாளைய தினம் பொதுச் சம்மேளனத்தில் கலந்து கொள்ளவுள்ள கட்சி ஆதரவாளர்களே தீர்மானிப்பார்கள் என்றும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்..

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.