புத்தளம் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து காலஅட்டவணையில் தற்காலிக திருத்தம்

புத்தளம் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து காலஅட்டவணையில் நாளை தற்காலிக திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க மற்றும் குரண ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையின் புனரமைப்பு பணிகளின் நிமித்தம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 3 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு ரயில் சேவையின் நேரத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து புத்தளம் நோக்கி அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில், முற்பகல் 9.50 இற்கு நூர் நகரிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கவுள்ள ரயில் மற்றும் பிற்பகல் 3.50 க்கு சிலாபம் ரயில் நிலையத்திலிருந்து மருதானை வரை புறப்படும் ரயில் எற்பவற்றின் சேவை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர அதிகாலை 4.50 க்கு சிலாபம் ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து, காலை 7.37 க்கு மருதானை வரை புறப்படும் ரயில், அதிகாலை 5.35 க்கும் சிலாபத்திலிருந்து புறப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.