துமிந்த சில்வா சிறைக்குள்ளிருந்து பேஸ்புக் பயன்படுத்தினாரா?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பேஸ்புக்கானது செயல்பாட்டில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறையில் இருக்கும் துமிந்தவால் இது பயன்படுத்தப்பட்டுள்ளனவா, என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பேஸ்புக்கில் பாரத லக்ஸ்மன் கொலை சம்பவத்தில் துமிந்த சில்வா காயமடைந்துள்ள புகைப்படம், அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற போது பிடிக்கப்பட்ட புகைப்படம் என்பன இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பேஸ்புக் ஆனது துமிந்த சில்வாவால் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தனது தந்தை கொலை செய்யப்பட்ட போது அவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் ஏற்பட்ட காயத்துடன் அவருடைய தந்தை இருக்கும் புகைப்படத்தை இணையங்களில் வெளியிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.