அமைச்சர் ரிசாட் பதியுதீனை பதவி விலக்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

அமைச்சர் ரிசாட் பதியுதீனை பதவி விலக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதமானது நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் ரிசாட்டின் அமைச்சான வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சில்இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள்முன்னெடுக்கப்பட்டு வருவதால் இந்த அமைச்சின் அமைச்சரான ரிசாட் பதியுதீனை பதவிவிலக்கக் கோரிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்;டுள்ளது.
வர்த்தக அமைச்சில் அரசி கொள்வனவு முறைகேடுகள் தொடர்பில் பாரிய மோசடிகள்தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தற்போது விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.
எனினும் குறித்த அமைச்சில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலேயேவிசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரிசாட் அண்மையில்தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த அமைச்சின் அதிகாரிகள் முன்னெடுக்கபடும் விசாரணைகளுக்கு பூரணஒத்துழைப்பை நல்குவார்களா என்பது சந்தேகமாகவுள்ளதாகவும், ஏனெனில் குறித்தவழக்கு தொடர்பான கோவைகள் அமைச்சர் ரிசாட்டின் பொறுப்பிலேயே தற்போதும்உள்ளதாகவும், அத்துடன் இந்த வழக்கின் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல்விடுக்கப்படலாம் எனவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்புசுட்டிக்காட்டியுள்ளது.
எனவே எமது நாட்டில் நல்லாட்சியினை உறுதிப்படுத்துவதன் பொருட்டு;முன்னெடுக்கப்படும் குறித்த விசாரணைகள் நிறைவுறும் வரை அமைச்சர் ரிசாட்பதியுதீனை பதவி விலக்குமாறு கோரி குறித்த அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.