வாகனம் ஓட்டிக்கொண்டு கைப்பேசி பயன்படுத்தினால் ஓட்டுனர் உரிமம் ரத்து - அரசு அதிரடி அறிவிப்பு

ஓட்டிக்கொண்டு கைப்பேசி பயன்படுத்தினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என அந்நாட்டு போக்குவரத்து துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
பிரித்தானிய நாட்டில் வாகனம் ஓட்டிக்கொண்டு கைப்பேசிகளை பயன்படுத்துவதால் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த விபத்துக்களை தவிர்க்க அந்நாட்டு போக்குவரத்து துறை ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை செயலாளர் Chris Grayling வெளியிட்டுள்ள செய்தியில், ‘வாகனம் ஓட்டிக்கொண்டு கைப்பேசியில் பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது அல்லது ஆப்களை பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஓட்டுனர் ஈடுப்பட்டால் அவருக்கு அதே இடத்தில் 200 பவுண்ட் அபாரதம் விதிக்கப்படும்.
அதே சமயம், அடுத்த 6 மாத காலத்திற்கு அவர் வாகனங்கள் ஓட்ட தடை விதிக்கப்படும்.
மேலும், ஒரே ஓட்டுனர் இரு முறை கைப்பேசியை பயன்படுத்தி பொலிசாரிடம் சிக்கினால், அவரது ஓட்டுனர் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என போக்குவரத்து செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘உறவினர்கள், நண்பர்களுக்கு செய்தி அனுப்புவது மற்றும் கைப்பேசியில் பேசுவது ஆபத்தான விடயம் அல்ல. ஆனால், வாகனங்களை ஓட்டிக்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுப்படுவதால் மற்றவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
எனவே, நமது சமுதாயத்தை பாதுகாக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. ஒவ்வொரு குடிமகனும் சாலை விதிகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து செயலாளர் தெரிவித்துள்ளார்.
அரசு அறிமுகப்படுத்த உள்ள இந்த புதிய சாலை விதிமுறைகள் 2017ம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.