புதிய VAT திருத்தத்தின் ஊடாக தனியார் சுகாதார சேவைகளுக்கு நிவாரணம்

புதிய VAT திருத்தத்தின் ஊடாக தனியார் சுகாதார சேவைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம், மருத்துவப் பரிசோதனைகள், குருதி வடிகட்டல் மற்றும் மருத்துவ ஆலோசனை சேவைகள் உள்ளடக்கப்படாத வெளி நோயாளர் சேவைகளுக்கு VAT வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட VAT வரித்திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் இன்று வெளியிடவுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பின்னர், நிதி அமைச்சரினால் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உத்தேச திருத்தத்திற்கு அமைய, VAT வரி 15 வீதமாக தொடர்ந்தும் பேணப்படவுள்ளது.
புதிய சட்டமூலத்திற்கு அமைய, வருடாந்தம் 50 மில்லியனுக்கு மேலதிகமாக வருமானத்தைப் பெறும் மொத்த மற்றும் சில்லரை வர்த்தகர்களிடம் VAT வரி அறவிடப்படவுள்ளது.
தொலைத்தொடர்பு சேவைகள், புகையிலை உற்பத்தி, சீனி அல்லது இனிப்பு வகைகள் அடங்கிய பால்மா போன்றவற்றிற்கும் 15 வீத VAT வரியை அறவிடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு ஒன்றிற்குப் பயணிப்பதற்கான விமான சீட்டிற்கான கட்டணத்திற்கும் VAT வரி அறவிடப்படவுள்ளது.
முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கும் ஆடைப்பிரிவின் ஊடாக அறவிடப்படும் வரியை 75 ரூபா வரை அதிகரிப்பதற்கு இந்த சட்டமூலத்தின் ஊடாக பிரேரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.