சிரியாவில் மருத்துவ வசதிகள் முழுமையாக சீர்குலையும் அபாயம் (Video)

சிரியாவில் அரச படைகளும், ரஷ்யாவும் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டி தனமான தாக்குதல்கள் காரணமாக மருத்துவ சுகாதாரக் கட்டமைப்புகள் முழுமையாக சீர்குலைந்து போயிவிடக் கூடிய நிலையில் உள்ளன என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும் மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அங்கு மருத்துவ வசதிகள் சரி செய்ய முடியாத அளவுக்கு முறிந்து போகக் கூடிய நிலையின் விளிம்பில் உள்ளன எனவும அவர்கள் சுட்டுக்காட்டியுள்ளனர்.
நாட்டில் நடைபெறும் மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் அங்கிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும், பெரும்பாலான பகுதிகளில் மருத்துவ வசதிகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மிகவும் மோசமான காயங்களுக்கு மருத்துவ உதவகள் கிடைப்பதில்லை எனவும், மயக்க மருந்தின் உதவியின்றியே அறுவை சிகிச்சைகளை செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் மக்களுக்கு உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவில், சிறார்களுக்கு தடுப்பூசிகள் போட முடியாமல் உள்ளதால், இப்படியான ஒரு அசாதாரண சூழல் காரணமாக தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளன எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
சிரிய அரச படைகள் மற்றும் ரஷ்யா படைகளின் காட்டுமிராண்டி தாக்குதல்கள் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 400 பேர் வரையில் பலியாகி உள்ளதாக சுட்டிக் காட்டிய மருத்துவமனை வட்டாரங்கள் அங்கு உள்ள கள மருத்துவமனைகளில் மேலதிகமானோரை அனுமதிக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றன.
முற்றுகையில் தவிக்கும் 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு முழுமையான மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில், வெறுமனே 3 வைத்தியர்கள் மாத்திரமே சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வாஷிங்டன் மற்றும் மாஸ்கோ இடையே போர் நிறுத்த உடன்பாடு தோல்வியடைந்ததை தொடர்ந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி காணப்படும் அதேவேளை, ஒவ்வொரு நாளும் 30 அறுவை சிகிச்சைகள் இடம்பெறுவதாக மேலும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் 280 பேர் கொல்லப்பட்டதாகவும், 400 பேர் காயமடைந்ததாகவும், இவர்களில் 61 குழந்தைகள் எனவும் சிரிய-அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் உறுதிபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.