Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

பேஸ்புக் காதலால் 120,000 ரூபா பணத்தை இழந்த கிண்ணியா பெண் - இளைஞன் கைது

Bublished By Online Ceylon on Monday, October 31, 2016 | 9:22 AM

-எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் பெண்ணொருவரிடம் பேஸ்புக்கில் காதலித்து ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த சந்தேக நபரை எதிர்வரும் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று (29.10.2016) சனிக்கிழமை உத்தரவிட்டார்.

கந்தளாய்-பேராறு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணொருவரை பேஸ்புக்கில் காதலித்து அப்பெண்ணிடம் திருமண வார்த்தைகள் கூறி ஏமாற்றி ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்து விட்டு தலைமரைவாக இருந்த நிலையில், தொடர்புகள் ஏதும் இல்லாது இருந்த நிலையிலே அப்பெண்ணிற்கு சந்தேகம் ஏற்பட பெற்றோர்கள் மூலமாக அப்பெண் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய குறித்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று சனிக்கிழமை காலையில் கைது செய்து திருகோணமலை நீதிவான் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved