சோற்றில் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் உடல் எடை குறையும்

பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகளில் ஒன்று சோறு. இந்த சாதத்தை இந்திய மக்கள் மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளிலும் உள்ள மக்களும் விரும்பி அதிகம் சாப்பிடுகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள நிறைய பேர் சோற்றை தான் சாப்பிடுகிறார்கள். 
இதனால் அவர்கள் ஒரு நாளைக்கு வேண்டிய கலோரிகளை விட அதிகமான அளவில் கலோரிகளை எடுக்கின்றன்ர். இதன் காரணமாகத் தான் அமெரிக்கர்கள் உடல் பருமனால் அவஸ்தைப்படுகின்றனர். ஸ்டார்ச் அதிகம் நிறைந்த சாதம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானது. ஏனெனில் அது சர்க்கரை நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும்.
ஒரு கப் சோறு
ஒரு கப் சமைத்த சோற்றில் சுமார் 240 கலோரிகள் உள்ளன. இந்த கலோரிகள் ஸ்டார்ச் வடிவில் உடலினுள் நுழைந்து, பின் சர்க்கரையாக மாறி, சில கொழுப்புக்களாக மாறும்.
இலங்கை ஆய்வு 
இலங்கையில் உள்ள வேதியியல் அறிவியல் கல்லூரியில் உள்ள ஒரு குழு ஆய்வினர் அத்தியாவசிய உணவான சோறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து சமைத்தால், கலோரிகளின் அளவு பாதியாக குறைக்கப்படுவது கண்டறியப்பட்டது.
சமைக்கும் முறை 
இந்த முறையில் சோற்றை குக்கரில் வைக்கக்கூடாது. பழங்கால முன்னோர்களின் வழியான பாத்திரத்தில் போட்டு சமைக்க வேண்டும். அப்படி சமைக்கும் போது, தண்ணீர் நன்கு கொதித்ததும், அத்துடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, பின் அரிசியை சேர்த்து குறைவான தீயில் 30-40 நிமிடம், சோற்றை நன்கு வேக வைத்து இறக்கி வடிகட்டி, 12 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் சாப்பிடவும்.
நன்மைகள் 
இந்த முறையில் சோற்றை சமைத்து சாப்பிட்டால், உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது எதிர்ப்பு சக்தி கொண்ட ஸ்டார்ச் அளவை 10 முறை உயர்த்தும்.
எப்படி? 
சமைக்கும் போது சோற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்க்கும் போது, அது ஸ்டார்ச் துகள்களின் உள்ளே நுழைந்து, சர்க்கரையை செரிமான நொதிகளாக்கும். இந்த முறையில் சாதத்தை குளிர வைக்கும் போது, அதில் உள்ள ஸ்டார்ச் வெளியிடப்பட்டு, அரிசியின் வெளியே உள்ளே துகள்களுடன் கூட்டிணைந்து, அரிசியில் உள்ள சர்க்கரை எதிர்ப்புத்தன்மை கொண்ட ஸ்டார்ச்சாக மாற்றும்.
சூடேற்றலாமா? 
12 மணிநேரம் கழித்து சோற்றை மீண்டும் சூடேற்றி சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் எழும். நிச்சயம் இந்த சோற்றை சூடேற்றி சாப்பிடலாம். இருந்தாலும் எந்த அரிசியைப் பயன்படுத்துவது என்று இன்னும் நிபுணர்கள் கண்டுபிடிக்கவில்லை.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.