இந்திய தீவிரவாத அமைப்பு சிவசேனா, தற்போது இலங்கையிலும்

இந்தியாவிலுள்ள தீவிரவாத சிவசேனா அமைப்புக்கு சமமான ஒரு அமைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் வை. யோகேஸ்வரன் வவுனியாவில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதற்கான ஒரு காரியாலயத்தையும் அவர் அங்கு திறந்துள்ளார்.
இந்த சிவசேனா அமைப்பின் பிரதான காரியாலயம் திருகோணமலையில் அமையப் பெற்றுள்ளது.
வவுனியா காரியாலய திறப்பு நிகழ்வில், ஐ.நா. முன்னாள் அதிகாரி சச்சிதானந்தனும் கலந்து கொண்டுள்ளார்.
கலாசார நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் சிவசேனா அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற இவ் வங்குரார்ப்பண நிகழ்வில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களில் இருந்து பெருமளவான இந்து மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது இந்து மதத்தின் வளர்ச்சி, மத மாற்றங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும், இந்து மக்கள் வாழும் பிரதேசங்களில் இடம்பெற்று வரும் மத ரீதியான ஆளுகைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், தமிழறிஞர் மறவன்புலவு சச்சிதானந்தம், வைத்திய கலாநிதி நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதாக இன்றைய சகோதர நாளிதழொன்று அறிவித்துள்ளது.
சிவசேனா அமைப்பு இந்தியாவில் தீவிரவாத செயல்கள் பலவற்றுடன் தொடர்புபட்ட ஓர் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.