மைத்திரி - ரணில் திருமணம் : விவாகரத்துக்கு இடமில்லை - சஜித்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் அரசியல் ரீதியான திருமணமானது பலமான ஒன்று என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குறித்த இருவரையும் விவாகரத்துக்கு அழைத்து செல்ல கூட்டு எதிர்க் கட்சி முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், அது ஒரு பகல் கனவாகும் எனவும் கூறியுள்ளார்.
அம்பலந்தொட்ட, பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்த கூட்டு எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது.
மேலும், இருவரையும் பிரித்து, இருவருக்கிடையில் கருத்து முரண்பாட்டைத் தோற்றுவித்து, விரிசலை ஏற்படுத்தி நல்லாட்சி அரசாங்கத்தைக் குழப்புவதற்கு முடியும் என அவர்கள் கனவு காண்கின்றனர்.
இது கூட்டு எதிர்க் கட்சியினரின் பகல் கனவாகும், எவ்வாறாயினும், அவர்களின் திட்டம் ஒருபோதும் நடைபெற மாட்டாது என அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.