பேஸ்புக்கினால் 17 வயது இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!! அதிர்ச்சியடைந்த பெற்றோர்

தற்போது சமூக வலைதளமான பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகு எங்கும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,பெரும்பாலான இளைஞர்கள் பேஸ்புக் மூலம் தற்போது காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.

பல்வேறு சமூக சீரழிவு செயல்களை செய்ய பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.

இதற்கமைய இந்திய – பூனேவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக் மூலம் இளம்பெண் ஒருவருக்கு காதல் வலைவீசி அந்த பெண்ணை கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூனேயை சேர்ந்த 21 வயதான இளைஞன் ஒருவன் தானே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கு ஃபேஸ்புக்கில் நட்பு அழைப்பு கொடுத்துள்ளான். இந்த நட்பு காதலாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

பேஸ்புக்கில் காதல் வளர்த்த அந்த இளைஞன் உன்னை திருமணம் செய்துகொள்வேன் என புனேவிற்கு அழைத்துள்ளான் அந்த பெண்ணை. பேஸ்புக் காதலனின் வார்த்தையை நம்பி சென்ற அந்த பெண்ணை அவன் பாலியல் துஷபிரயோகம் செய்துள்ளான்.

இதனை தொடர்ந்து, நாடகள் கடந்து செல்ல குறித்த இளம் பெண் கர்ப்பமடைந்துள்ள நிலையில் காதலனின் பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி திருமணம் செய்து வைக்க கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் அந்த பெண்ணை நிராகரித்து அனுப்பியுள்ளனர். இதனால் மனமுடைந்த இளம்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதனை தொடர்ந்து அந்த இளைஞன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.