மீண்டும் 1983 ஆம் ஆண்டு நிலைமை உருவாகிறது - தினேஷ் குணவர்தன

கடந்த 1983 ஆம் ஆண்டிலும், இன்றுள்ளது போன்ற மோசமான பின்னணியிலே நாட்டின் பெரும் குழப்ப நிலை உருவானது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வடக்கில் யாழ்ப்பாணம், கல்பிட்டி, சுன்னாகம் மட்டக்குளி ஆகிய பிரதேசங்களில் ஆயுதம், வாள் என்பன பயன்படுத்தி கொலை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. சட்டம் ஒழுங்கை செயற்படுத்துவதில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.