தங்கையை கொலைசெய்து பிணத்தையும் மறைத்த அண்ணன்

சுவிட்சட்லாந்தின் Gaggiolo பகுதியில் நாடியா என்ற ஆசிரியை பிணமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பொலிசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
35 வயது ஆசிரியையின் சகோதரனே அவரை கொன்று பிணத்தை மறைத்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இத்தாலியிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு பயணிக்கும் வழியில் சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
42 வயதான சுவிஸ் குடிமகனான அவர் இத்தாலிய சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று காட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட நாடியாவின் பிரேத பரிசோதனையில் அவர் நுரையீரல் பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நாடியா நச்சு அல்லது அளவுக்கும் அதிகமான போதையினால் உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கொலை சம்பவம் நாடியா வாழ்ந்து வந்த வீட்டில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இக்கொலைக்கும் பெற்றோருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை தெளிவுபடுத்த பொலிசார் மறுத்துள்ளனர்.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.