திருகோணமலை மாவட்ட சுற்றாடல் மாநாடு மற்றும் 'வனரோபா' தேசிய மரநடுகை செயற்திட்டத்திட்ட தேசிய நிகழ்வு நேற்று கடந்த 21ம் திகதி திருகோணமலை மெக்கெய்ஸர் திறந்த வெளி விளையாட்டரங்கில் காலை 11.00 மணிக்கு அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சுற்றாடல் பாதுகாப்புக்காக சிறப்பான பங்களிப்புச் செய்தவர்கள் ஜனாதிபதி அவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் எதிர் கட்சி தலைவர் இரா சமபந்தன்,கிழக்கு மாகாண முதலவர் நசீர் அஹமத், கெளரவ அமைச்சர்கள்,மாகாண அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான ஆர் .எம் .அன்வர் மற்றும் லாஹிர் உட்பட அரசாங்க அதிபர்கள்,அரச உத்தியோகத்தர்களை பலரும் கலந்துகொண்டனர். அத்தோடு கிழக்கு மாகாண அரச அலுவலர்களால் அனர்த்த நிவாரண செயற்பாட்டர்களுக்காக வழங்கப்பட்ட காசோலை கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோவினால் ஜனாதிபதியிடம் கையலிக்கப்பட்டது.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
வாழைச்சேனை
0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்