பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கு, ஷரீஆ சட்­டத்தை அமுல்­ப­டுத்­த அதி­காரம் இல்லை - வக்பு சபை

இலங்­கையின் வக்பு சட்­டத்தில் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கு ஷரீஆ எனும் இஸ்­லா­மிய சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு அதி­காரம் வழங்­கப்­ப­ட­வில்லை.

அவ்­வாறு இஸ்­லா­மிய சட்­டத்தை அமுல்­ப­டுத்­தினால் அது நாட்டின் சட்­டத்­துக்கு முர­ணா­ன­தாகும். இதில் தெளி­வில்­லாமல் சில பிர­தே­சங்­களின் பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் செயற்­ப­டு­கி­றார்கள்.

இது தொடர்பில் சுற்று நிரு­ப­மொன்று அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசின் தெரி­வித்தார்.

புத்­தளம் பிர­தே­சத்தைச் சேர்ந்த நல்­லந்­த­ழுவ பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­பட்­ட­தாகக் கூறப்­படும் பெண்­ணொ­ரு­வ­ருக்கு தென்னை மட்­டையால் 100 அடிகள் வழங்கி தண்­டனை நிறை­வேற்­றி­யமை தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

குறிப்­பிட்ட பெண்­ணுக்கு 100 அடிகள் வழங்கி ஷரீஆ தண்­ட­னையை நிறை­வேற்­றிய குற்­றச்­சாட்டின் கீழ் புத்­தளம் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்ட நல்­லந்­த­ழுவ பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் நால்வர் புத்­தளம் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது அவர்கள் நால்­வ­ரையும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ரவு பிறப்­பித்தார்.

நேற்று முன்­தினம் அவர்­க­ளுக்கு சட்­டத்­த­ர­ணி­யினால் பிணை கோரப்­பட்­ட­போதும் பிணை மறுக்­கப்­பட்­ட­துடன் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 2 ஆம் திகதி வரை அவர்­க­ளுக்கு விளக்­க­ம­றியல் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

வக்பு சபைத் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசின் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

நாட்டில் அமு­லி­லுள்ள சட்­டத்­துக்கு முர­ணாக எந்­தவோர் குடி­ம­க­னுக்கும் செயற்­பட முடி­யாது. நாட்டில் அமுலில் இல்­லாத ஷரீஆ இஸ்­லா­மிய சட்­டத்தை இங்கு அமுல்­ப­டுத்த முடி­யாது. வக்பு சட்­டத்தின் கீழ் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கு பள்­ளி­வா­சல்கள் மற்றும் வக்பு சொத்­து­களை நிர்­வ­கிக்கும் அதி­காரம் மாத்­தி­ரமே வழங்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டின் சட்­டத்­துக்கு முர­ணாக பாத­க­மாக எவரும் நடந்தால், அவர்­க­ளது நடத்தை அமைந்­தி­ருந்தால் சம்­பந்­தப்­பட்ட பிர­தேச பொலிஸ் நிலை­யத்­துக்கு அறி­வித்து நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். இதை­வி­டுத்து தாம் நினைத்­த­படி ஷரீஆ சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் எவ­ருக்கும் குற்­ற­வியல் சட்­டத்தின் கீழ் தண்­டனை வழங்­கப்­பட முடியும்.

சில பிர­தே­சங்­களில் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் சில குற்­றங்­க­ளுக்கு சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை ஊரி­லி­ருந்தும் ஒதுக்கி வைத்­து­வ­ரு­கின்­றன. இவ்­வா­றான தண்­ட­னை­க­ளையும் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களால் வழங்க முடி­யாது. இது மனித உரிமை மீறல்­க­ளாகும்.

கசை­ய­டிகள், ஊரி­லி­ருந்து விலக்கி வைத்தல் போன்ற தண்­ட­னைகள் புத்­தளம், அநு­ரா­த­புரம், பொல­ந­றுவை மற்றும் வடக்கு, கிழக்­கி­லேயே இடம்­பெ­று­கின்­றன.

இப்­ப­கு­தி­க­ளி­லுள்ள பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களை இது தொடர்பில் தெளி­வு­ப­டுத்தி இது இலங்­கையின் சட்­டத்­துக்கு முர­ணா­னது என்­பதை எடுத்­து­ரைப்­ப­தற்கு செய­ல­மர்­வுகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. இச்­செ­ய­ல­மர்­வு­களை முஸ்லிம் சமய, கலா­சார, அலு­வல்கள் திணைக்­களம் நடத்தி வரு­கி­றது.

ஒரு­வ­ரது ஒழுக்­க­யீனம் தொடர்­பாக விசா­ரித்து தண்­டனை வழங்­கு­வ­தற்கு பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்கு எந்த அதி­கா­ர­மு­மில்லை என்றார்.

கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்பு ஒரு பெண் வீட்­டி­லி­ருந்த வேளை இனந்­தெ­ரி­யாத நபர் ஒரு­வ­ரினால் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

இவ்­வாறு துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளான பெண் இது தொடர்பில் புத்­தளம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டொன்­றினை முன்­வைத்­துள்ளார். சந்­தேக நபர் தப்பிச் சென்­று­விட்­ட­தா­கவும் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்ய புத்தளம் பொலிஸார் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையிலே குறிப்பிட்ட பெண் பள்ளிவாசலுக்கு அழைக்கப்பட்டு 100 தென்னம்மட்டை அடிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்தே நீதிமன்றம் சந்தேக நபர்கள் நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

 -விடிவெள்ளி -ARA.Fareel-

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.