புல்மோட்டை பனா கல்வி நிலையத்தின் முப்பெரும் விழாவில் கெளரவ அதிதியாக மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர்

எம்.ரீ. ஹைதர் அலி
திருமலை மாவட்டத்தின், புல்மோட்டை தனியார் பனா கல்வி நிலையத்தின் முப்பெரும் விழா 2016.10.25ஆந்திகதி (செவ்வாய்க்கிழமை) பி .ப . 04.00 மணியளவில் அந்நிறுவனத்தின் தலைவர் சகோதரர் சல்மான் பாரீஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், கல்வித் துறையில் சாதனை படைத்த மாணவர்களையும் கெளரவித்து சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம் . அன்வர்அவர்களும், விசேட அதிதியாக எழுத்தாளர் இத்ரீஸ் (நளீமி) அவர்களும் ஏனைய அதிதிகளாக முன்னாள் உதவி தவிசாளர் ஏ.பி. தௌபீக், முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ. பதுர்தீன், சுகாதார பரிசோதகர் சுதார்தீன், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிவாசல்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.