நானுஓயா பகுதியில் பாரிய விபத்து : இருவர் பலி- எழுவர் படுகாயம்

நானுஓயா கிளாரன்டன் தோட்ட பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்று 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.
நானுஓயா கெல்சிமா எலிய பகுதியிலுள்ள மரக்கறி தோட்டமொன்றுக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் நுவரெலியாவுக்கு திரும்பி சென்ற வேளையிலேயே இவ்விபத்து நடந்துள்ளது.
குறித்த டிப்பர் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்டவிசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.