ஜாமிஅதுல் பலாஹ் ஸ்தாபகர் அப்துல்லாஹ் ரஹ்மானி காலமானார்

காத்தான்குடியில் அமைந்திருக்கும் இலங்கையின் தொன்மையான பிரசித்தி பெற்ற ஜாமிஅதுல் பலாஹ் அரபுக்கலாசாலையின் ஸ்தாபகரும் கொழும்பு 2ம் குறுக்குத்தெரு ஜாமிஉல் அழ்பர் (சம்மாங்கோடு) ஜும்ஆ மஸ்ஜிதின் தலைவரும் இந்தியா-அதிராம்பட்டின‌த்தை பிறப்பிடமாகக் கொண்டவருமான‌ ஷைகுல் பலாஹ் மௌலானா மௌலவி எம்.ஏ.அப்துல்லாஹ் ரஹ்மானி (பெரிய ஹஸர‌த்) அவர்கள் தனது 84வது வயதில் சற்றுமுன் காத்தான்குடியில் வபாத்தானார்கள்.
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
இவர் இந்தியா-அதிராம்பட்டின‌த்தை பிறப்பிடமாகக் கொண்டிருந்த போதிலும் இலங்கை மக்களை நேசிக்கும் நற்குணமுள்ளவர். தனது ஆயுளின் பெரும்பகுதியை காத்தான்குடியில் கழித்த ஷேக் அவர்கள், மார்க்கக் கல்வியை கற்றல், கற்பித்தல் துறையில் மிகுந்த அக்கறை செலுத்தியதோடு ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் அதிபராகத் திகழ்ந்து, இலங்கையின் பிரசித்தி பெற்ற‌ பல நூற்றுக்கணக்கான ஹாபிழ்களையும் ஆலிம்களையும் உருவாக்கியவர் ஆவார்.
மேலும் கொழும்பு சம்மாங்கோட்டைப் பள்ளியின் ஆயுட்காலத் தலைவர் பதவியை வகித்த அன்னார் இலங்கையிலுள்ள பல அரபுக்கலாசாலைகளது சிரேஷ்ட ஆலோசகராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாஸா நல்லடக்கம்:
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அழ்ழாஹ் நாளை (13.10.2016) வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு காத்தான்குடி-05, ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளி மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.
“அன்னாரின் மறுவுலக வாழ்க்கை சிறப்பானதாக அமைய நாமும் அழ்ழாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வோம்”

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.