புத்தளம் கோர்ட்டில் சட்டத்தரணிகள் உதவியின்றி பொலிஸாருக்கு எதிராக வழக்காடி வென்ற முஸ்லிம் சகோதரர்

நிகவரட்டிய பிரதேசத்தை சேர்ந்த அஹ்மது பாருக் அவர்களுக்கு எதிராக சாலியவெவ பொலிஸார் 2014 நவம்பர் மாதம் புத்தளம் நீதிமன்றில் பதிவு செய்திருந்த வழக்கில் அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. 
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது... 
 நிகவரட்டிய பிரதேசத்தை சேர்ந்த அஹ்மது பாருக் அவர்களுக்கு எதிராக சாலியவெவ பொலிஸார் 2014 நவப்பர் மாதம் புத்தளம் நீதிமன்றில் பதிவு செய்திருந்தனர்.அவரது லொறியில் இருப்பினால் ஆன கூடு ஒன்றை அனுமதி இல்லாமல் பொருத்தியமைக்காகவே அவர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
இந்த நிலையில் தன் மீது பொலிஸார் அபாண்டமாக குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளதாக நீதிமன்றில் வாதாடியுள்ள ஜனாப் பாருக் அவர்களை நேற்றைய தினம் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 
முன்னதாக பல்லம பொலிஸார் பாருக் அவர்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் சட்டத்தரணிகள் இன்றி தானே வாதாடிய அவர் வழக்கில் இருந்து விடுதலையானார். 
நிக்கவரட்டிய பிரதேசத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஜனாப் பாருக் வர்த்தகர் எனபது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.