மத்திய வங்கி முறி மோசடி கோப் குழு விசாரனைகள் நிறைவு - பிரதமரும் சிக்குவார் ?

பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் ரோயல் கல்லூரி நண்பரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனருமான அர்ஜுன மகேந்திரன் மத்திய வங்கி ஆளுனார இருந்த காலத்தில் மத்திய வங்கி முறிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் கோப் குழு தனது விசாரனைகளை நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வரும் வாரம் கோப் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

மத்திய வங்கி முறி மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்படும் பெர்பசுவல் நிறுவனத்தின் கடந்த நிதி ஆண்டின் கணக்கு அறிக்கையின் படி அந்த நிறுவனம் ஒரு வருடத்தில் 520 கோடி ரூபா லாபம் ஈட்டியுள்ளது தெரிவந்துள்ளது.

20 ஊழியர்களை கொண்ட குறித்த நிறுவனம் இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை விட லாபம் ஈட்டியுள்ளது தொடர்பில் கடும் விமர்சங்கள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் கோப் குழுவின் விசாரணை அறிக்கைகளின் படி முன்னாள் மத்திய வங்கி ஆளுனருக்கு பாதகமான் முறையில் குறித்த அறிக்கைகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே சிவில் அமைப்புகள் மற்றும் எதிர்கட்சிகள் மத்திய வங்கி முறி மோசடிகள் தொடர்பில் கடும் விமர்சனம் முன்வைத்து வரும் நிலையில் கோப் குழுவின் அறிக்கை பிரதமருக்கு கடுமையான சிக்கல்களை கொண்டு வந்து சேர்க்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.