Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மாவடிச்சேனை இக்பால் வித்தியாலயத்தின் தேவைப்பாடுகளை கேட்றிந்துகொண்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

Published on Saturday, October 22, 2016 | 8:03 AM

எம்.ரீ. ஹைதர் அலி
மட்டு மாவட்டத்தின், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின், கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மட்/மம/மாவடிச்சேனை இக்பால் வித்தியாலயத்திற்கு அதிபரின் அழைப்பின்பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் 2016.10.18ஆந்திகதி செவ்வாயக்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்போது பாடசாலையின் அதிபர் மீராமுகைதீன் அவர்களினால் பாடசாலையின் தேவைப்பாடுகள் தாடர்பாக மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கிடம் தெரியப்படுத்தினார்.

இப்பாடசாலையானது 1990ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தரம் 1-5 வரையான வகுப்புக்களை கொண்டுள்ளதோடு, 286 மாணவர்கள் கல்வி கற்றும் வருவதாகவும், ஆரம்பப்பிரிவுக்கான ஆசிரியர் ஆளணிகள் மற்றும் கட்டட தேவைப்பாடுகளும் காணப்படுவதாகவும் பாடசாலையின் அதிபர் தெரிவித்தார். மேலும் இப்பாடசாலை போக்குவரத்து கூடுதலாகவுள்ள மாவடிச்சேனை - கொழும்பு பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ளதால் இம்மாணவர்களின் கல்வியினை கருத்திற்கொண்டு இப்பாடசாலையினை 6 - 9 ஆம் தரம் வரை தரமுயர்த்தி தருமாறும் பாடசாலையின் அதிபர் கேட்டுக்கொண்டார்.

இதனை கருத்திற்கொண்டு, கட்டட குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதற்கும், முற்றுமுழுதாக நிறைவடையாமல் காணப்படும் வாசிகசாலை கட்டடத்தினை பூர்த்திசெய்வதற்கும் முதலமைச்சருடன் இது விடயமாக தெரியப்படுத்தி அதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும், இப்பாடசாலையில் காணப்படும் வாசிகசாலையின் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு தேவைப்பாடாகவுள்ள நூல்களின் விபரங்களை தனக்கு வழங்குமாறும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பெற்றுத்தருவதாகவும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

இவ்விஜயத்தின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுடன், மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபை தலைவரும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட், மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி, பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர் ஏ.எம். அஸ்மி மற்றும் அதிபர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து இப்பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் என். சஹாப்தீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved