Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

BRICS – BIMSTEC மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி இந்தியா பயணம்

Bublished By Online Ceylon on Saturday, October 15, 2016 | 7:36 AM

பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதியதோர் தோற்றைத்தக் குறிக்கும் வகையில் நடைபெறும் BRICS – BIMSTEC மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (15) இந்தியா பயணமாகிறார்.
8 வது தடவையாக நடைபெறும் இந்த BRICS மாநாட்டின் தலைமை பொறுப்பும் உபசரிப்பு பொறுப்பும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
ஒக்டோபர் மாதம் 15 – 16 திகதிகளில் இம்மாநாடு இந்தியாவின் கோவாவில் நடைபெறுகிறது.
இந்தியா. சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆபிரிக்கா ஆகிய வளர்ச்சியடைந்து வரும் ஐம்பெரும் பொருளாதார நாடுகளும் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய BIMSTEC நாடுகளும் உட்பட ஆப்கானிஸ்தான் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் தலைவர்களும் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றனர்.
‘எல்லாவற்றையும் உள்ளடக்கிய, கூட்டுத் தீர்வுகளை கட்டியெழுப்புதல்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இம்மாநாட்டில் BIMSTEC அபிவிருத்தி வங்கி, சுகாதாரம், நிலைபேறான அபிவிருத்தி, தூய மற்றும் பசுமை மின்சக்தி ஆகிய துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
மொத்த உலக சனத்தொகையில் சுமார் அரைவாசி அளவு இந்த அமைப்பின் கீழ் வருவதுடன், இவ்வமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் மொத்த பொருளாதாரத்தின் நிகர தேசிய உற்பத்தி 16.6 ரில்லியன் டொலர்களாகும். மொத்த வெளிநாட்டு  கையிருப்பு அளவு 4 ரில்லியன் அமெரிக்க டொலர்களைப் பார்க்கிலும் அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக நிகர தேசிய உற்பத்தியில் 37 வீதத்தையும் உலக வியாபாரத்தில் 17 வீதத்தையும் BRICS அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் கொண்டுள்ளன.
உலகில் பலம் மிக்க நாடுகளாக வருவதற்காக போட்டியிடும் முக்கிய நாடுகளுக்கு சமானமாக இந்த மாநாட்டில் மத்தியதர வருமானம் பெறும் ஒரு நாடாக இலங்கை இணைந்துகொள்ள கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையின் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்து உலகத் தலைவர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் விளக்குவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பது இலங்கைக்கு அதிகம் நன்மை பயக்கக்கூடிய ஒன்றாகும்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் சம பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளுதல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு BRICS அமைப்பு உலக அரசியல், பொருளாதார துறையில் விசேட கவனத்தைப் பெற்றுள்ளது.
சீன,இந்தியா,பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து 2009ஆம் ஆண்டு உருவாக்கிய BRICS அமைப்பில் 2010ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவும் இணைந்துகொண்டது. அந்த நாடுகளின் ஆரம்ப எழுத்துக்களைப் பயன்படுத்தி BRICS என்ற பெயர் இந்த அமைப்புக்கு வழங்கப்படுகிறது.
BRICS மாநாட்டில் பங்குபற்றும் ஜனாதிபதி அவர்கள், மாநாட்டில் பங்குபற்றும் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved