களியாட்ட விடுதியில் தாக்குதல் சம்பவம்: தஹம், யோசித மீது சந்தேகம் - பொலிஸார் நெருக்கடியில்

கடந்த சனிக்கிழமை 'Cliqu' இரவுநேர களியாட்ட விடுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவ்விதமான முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக பொலிஸாரினால் விசாரணை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை இரவு 2.00 மணிக்கும் 2.30க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன தொடர்புபட்டுள்ளதாக ஆரம்பத்தில் செய்தி வெளியாகியிருந்தன.
எனினும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தஹாம் சிறிசேனவுக்கு தொடர்பு உள்ளதாக வெளியான செய்தியை குறித்த விடுதி முகாமையாளர் நிராகரித்திருந்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விடுதி உரிமையாளர் இதுவரையில் முறைப்பாடு செய்யாமல் இருப்பதற்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.
விடுதி மீதான தாக்குதல் சம்பவத்துக்கும் தஹாம் சிறிசேனவுக்கும் தொடர்பு உண்ணடா இல்லையா என்பது தொடர்பிலும் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் யோஷித ராஜபக்ஷ இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும், குறித்த இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சென்று நிலைமையை சமூக நிலைக்கு கொண்டு வந்ததாகவும் சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதல் சம்பவம் காரணமாக விடுதியின் ஜன்னல்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன், அத்துடன் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.