தாய்லாந்தில் நீச்சல் தடாகத்தில் விழுந்த ஜனாதிபதியின் புகைப்படப் பிடிப்பாளர்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின் போது சுவாரஸ்சமான நிகழ்வு ஒன்று இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் நிகழ்வுகளை பதிவு செய்து கொண்டிருந்த ஜனாதிபதி ஊடக பிரிவு ஊடகவியலாளர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் விழுந்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ ஊடகபிரிவின் புகைப்படபிடிப்பாளரான ஜனக சமன் வீரசிங்க என்பவரே நீர்தடாகத்தில் வீழ்ந்துள்ளார்.
ஜனாதிபதியின் நிகழ்வுகளை பதிவு செய்து கொண்டுடிருந்த அவர், அவருக்கு பின்னால் இருந்த நீச்சல் தடாகத்தில் தனது கமராவுடன் விழுந்துள்ளார்.
அவர் நீருக்குள் மூழ்குவதற்கு முன்னர் அருகில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டுள்ள போதிலும் அவருடைய கமரா பழுதாகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
இதுவொரு நகைப்புக்குரிய விடயமல்ல, இந்த சம்பவத்தின் பின்னால் உள்ள அர்த்தத்தை புரிந்துக் கொள்ள வேண்டும் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகின் எந்தவொரு தொழில் ரீதியிலான வீடியோ ஊடகவியலாளர் ஒருவரும் தனக்கு உதவியாளர் இன்றி பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. ஜனக சமன் வீரசிங்கவுக்கு உதவியாளர் ஒருவர் உள்ள போதிலும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு பிரதானி தாய்லாந்து விஜயத்தின் போது சமனின் உதவியாளரை அழைத்து செல்வதற்கு இடமளிக்கவில்லை. அவர் தனியாகவே சென்றுள்ளார். இவ்வாறு உதவியாளர் இல்லாமையின் காரணமாகவே அவர் கீழே விழுந்துள்ளார்.
அவரது உயிர் காப்பாற்றப்பட்டமை மகிழ்ச்சியான விடயம் என்ற போதிலும் வெளிநாடு ஒன்று நாட்டின் அரச தலைவருக்கு அவமானத்தை ஏற்பத்தியுள்ள பொறுப்பினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு பிரதானி ஏற்றுக்கொள்ள வேண்டும் கொழும்பு ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.