பாகிஸ்தானிலிருந்து அன்பான கடிதம் - வைரலாகும் பெண்ணின் பதிவு

இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சனையில் ஒருவருகொருவர் மோதி கொள்ளும் பதற்றமான சூழல் நிலவி வரும் இந்த சூழலில், இரு நாடுகளும் சண்டையை வளர்க்காமல் அன்பை வளர்க்கலாமே என்னும் ரீதியில் ஒரு கட்டுரையை பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.
அலிசோ ஜாபர் என்னும் இளம் பெண் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் வசித்து வருகிறார்.
இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இரு நாட்டு எல்லையை சேர்ந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் எதற்கு வெறுப்புணர்ச்சியை பரப்பி கொண்டிருக்கிறோம்.
இந்திய நடிகர் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் இருக்கும் போது அவருக்கு குணமாக வேண்டும் என நாமும் தானே வேண்டினோம்.
பல சமயங்களில் நாம் விவாகரத்து பெற்ற தம்பதிகள் போல நடந்து கொள்கிறோம். இடத்தை பகிர்ந்து கொண்டால் யாருக்கு இழப்பு என சண்டை போடுகிறோமே தவிர நாம் ஒன்றாக இல்லை என்ற உண்மையை ஏற்று கொள்ள ஏன் மறுக்கிறோம்?
நான் வேறு நாட்டுக்கு சென்று படித்தவள், என் பாதி மகிழ்ச்சியான நாட்களை நம் எல்லையை தாண்டிய மக்களுடன் தான் நான் செலவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலி பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் போல நான் சிறந்தவரை பார்த்த்தில்லை என முன்பு கூறியதை மறக்க முடியுமா? அல்லது இந்திய பெண் சானியா மிர்சா நம் நாட்டின் சோயிப் மாலிக்கை திருமண செய்த நிகழ்வை மறக்கமுடியுமா என அவர் கூறியுள்ளார்.
இரு நாடுகளின் நடுவில் ஏற்பட்டுள்ள இந்த பிரிவு இரு பக்கத்திலும் வலியை மட்டுமே ஏற்படுத்தும், சகோதர சகோதரிகளே வாருங்கள், எல்லாரும் அன்பால் இணைவோம் என அவர் உருக்கமாக தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.
அவரின் இந்த பேஸ்புக் பதிவு 12000க்கும் மேற்ப்பட்ட நபர்களால் லைக் செய்யப்பட்டு, 5000 க்கும் மேற்ப்பட்ட நபர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.