தாயின் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தி மகளை கடத்திச்சென்ற காதலன்

திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி காதலியை கடத்திச்சென்று வனப்பகுதியொன்றில் தடுத்து வைத்திருந்த காதலன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் மிஹிந்தலை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரம்பேவ – தொலஹ எல – கினிகடுவெவ கிராமத்தை சேர்ந்த 17வயதுடைய குறித்த பெண் , 18 வயதுடைய அவரது காதலனுடனாக தொடர்பை முறித்துக்கொள்ள தீர்மானித்துள்ளதை தொடர்ந்தே இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான குறித்த காதலன் , அவரது நண்பருடன் முகத்தை மறைத்துக்கொண்டு நேற்று அதிகாலை , குறித்த பெண்ணின் வீட்டிற்கு வந்து , பெண்ணின் தாயின் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தி குறித்த பெண்ணை பலாத்காரமான முறையில் கடத்திச்சென்றுள்ளார்.
இதன் போது , பெண்ணின் தாய் , மகளை காப்பாற்ற போராடியுள்ள நிலையில் , சந்தேக நபரை அவர் அடையாளம் கண்டு கொண்டுள்ளார்.
அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை காவற்துறைக்கு முறைப்பாடொன்று தாயினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் , வனப்பகுதியொன்றில் இருந்து குறித்த பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதன் போது , அவரை கடத்திச்சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய குறித்த காதலன் மற்றும் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.