UPDATE: குறிஞ்சிப்பிட்டி சாலை மறியல் முடிவுக்கு வந்தது - பலர் மீது தாக்குதல், வாகனங்கள் தீக்கிரை (Photos)


பாலாவி - கல்பிட்டி பிரதான வீதி குறிஞ்சிப்பிட்டியில் கண்டல்குழி மக்களால் நேற்றைய தினத்திலிருந்து (20) லைலா வலைத் தொழிலுக்கெதிராக  நடத்தப்பட்ட வீதி மறியல் போராட்டத்தினால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு உற்பட்டனர். பலர் மீது அனாவசியமாக தாக்குதல் மேற்பொள்ளப்பட்டுள்ளது. பல வாகனங்கள் தீயிட்டு பொழுத்தப்பட்டுள்ளன. அதே வேளையில் அரச தனியார் நிருவனங்களில் அன்றாட இயல்புநிலை பாதிக்கப்பட்டது. 

கல்பிட்டி பெரிய பள்ளித் தலைவர் மீதும் தாக்குதல்
பாலாவி - கற்பிட்டி பாதை தடைசெய்யப்பட்டுள்ளதால் கல்பிட்டி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதோடு மேற்படி ஆர்ப்பாட்டம் ஒரு இன கலவரமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக கல்பிட்டி பள்ளிவாசல் தலைவர் தலைமையில் ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கலந்துரையாட முற்பட்ட போது அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் கல்பிட்டி பெரியபள்ளி தலைவர் சாஜஹானை கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

கீழ்தரமான வார்த்தைகளால் தூற்றிய அவர்கள் அவரின் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் முன்னிலையில் எரியூட்டப்பட்டுள்ளனர். தற்போது அவர் தலைவர் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த  பொலிசாரிடம் இது தொடர்பாக விணவிய போது, ”எமக்கு இன்னும் நீதிமன்ற உத்தரவு கிடைக்க வில்லை” என அலட்சியமாக கூறினர்.

நிலைமை முடிவுக்கு வந்தது
பொது மக்கள் கடுமையாக பாதிக்கட்டு வருவதை அறிந்து, ஆர்ப்பாட்டக் காரர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் புத்தளம் மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் MHM. நவவி மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் MHM  நியாஸ் ஆகியோர்  ஈடுபட்டுள்ளனர். பல கட்ட முயற்சின் பின்னர் புத்தளம் பொலிஸ் அத்தியச்சகர் மூலமாக அதிரடிப் படையினரால் இன்று (21) மாலை சாலை மறியலை தடுத்து ஆர்ப்பாட்டக் காரர்கள் திருப்பி அனுப்பப்பட்டதையடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.




Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.