Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

UPDATE: உழுக்காப்பள்ளம் சதாம் கொலை - நால்வர் பொலிஸில் சரண் , இன்று கோர்ட்டில் ஆஜர்

Bublished By Online Ceylon on Monday, October 17, 2016 | 12:22 PM

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனையடிச்சோலை - உளுக்காப்பள்ளம் சந்தியில் வைத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (14) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், முஹம்மது பாஸர் முஹம்மது சதாம் (வயது 25) எனும் இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவருக்கும் மற்றொருவருக்கும் இடையில் நிலவிவந்த பகையே இந்தக் கத்திக்குத்துக்க காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கரம்பை கடையாமோட்டை வீதியின் பனையடிச்சோலை - உளுக்காப்பள்ளம் சந்தியில் வைத்து குறித்த நபர் மீது, அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான இளைஞர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

ஜனாஸா நல்லடக்கம்

பிரேத பரிசோதனைகளின் பின்னர் புத்தளம் தள வைத்தியசாலையில் இருந்து எடுத்துவரப்பட்ட முஹம்மது பாஸர் முஹம்மது சதாம் இன் ஜனாஸா சனிக் கிழமை (15) 11 மணியளவில் புழுதிவயல் பொது (முஸ்லிம்) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சந்தேக நபர்கள் பொலிஸில் சரண்
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தலைமைறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில் புத்தளம் - புழுதிவயலைச் சேர்ந்த நால்வர் புத்தளம் பொலிஸில் சரணடைந்துள்ளதாக ஒன்லைன் சிலோன் செய்திப்பிருவுக்கு சற்று முன் செய்தி பெறப்பட்டது.

நீதி மன்றில் ஆஜர்

இன்று (17) சந்தேக நபர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved