Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

வரலாற்றில் இன்று :ஆட்சிப்பீடம் ஏறிய மஹிந்த ..? மிகுதி உள்ளே...

Bublished By Online Ceylon on Saturday, November 19, 2016 | 11:54 AM

நவம்பர் 19 (November 19) கிரிகோரியன் ஆண்டின் 323 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 324 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 42 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்

2005

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தராஜபக்ஸஇலங்கையின் 5வது நிறைவேற்று ஜனாதிபதியாக நவம்பர் 19 ஆம் திகதி தான் பதவியேற்றார்.

1493

கொலம்பஸ் முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா எனப் பெயர் சூட்டினார்.

1794

அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1816

வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது இன்று தான்.

1881

உக்ரேனில் ஒடீசா நகரில் விண்கல் ஒன்று வீழ்ந்தது.
1932
1941சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் HMAS சிட்னி, மற்றும் HSK கோர்மொரன் என்ற போர்க்கப்பல்களுக்கிடையில் நிழந்த மோதலில் இரண்டும் மூழ்கின.
இதில் 645 அவுஸ்திரேலியக் கடற்படையினரும் 77 நாசி ஜெர்மனியக் கடற்படையினரும் கொல்லப்பட்டனர்.

1942

இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் சண்டை - சோவியத் படையினர் ஸ்டாலின்கிராட் நகர் மீது மீள் தாக்குதலை ஆரம்பித்தனர். இது பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளித்தது.

1946

ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியன ஐ.நாவில் இணைந்தன.

1969

அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ள்ஸ் கொன்ராட், அலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர்கள் என்ற பெயரினைப் பெற்றனர்.

1969

பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் பெலே தனது 1,000வது கோலைப் பெற்றார்.

1977

எகிப்திய அதிபர் அன்வர் சதாத் அமைதிப் பேச்சுக்களுக்காக இஸ்ரேல் சென்றடைந்தார். இஸ்ரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே.

1977

போர்த்துக்கல் போயிங் விமானம் ஒன்று மெடெய்ரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

1984

இலங்கை இராணுவத்தின் வட மாகாணத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெரும யாழ்ப்பாணம், கட்டுவன் என்ற இடத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

1984

மெக்சிக்கோ நகரில் எண்ணெய்க்குதங்களில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் கொல்லப்பட்டனர்.

1985

பனிப்போர்: அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.

1991

தமிழீழ காவல்துறை நிறுவப்பட்டது.

1999

மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது சென்ஷோ விண்கலத்தை ஏவியது.

சிறப்பு நாள்

மாலி - விடுதலை நாள்
இந்திய தேசிய ஒருமைப்பாட்டு தினம்
உலகக் கழிவறை நாள்
நண்பர்களுக்கு பகிரவும் :

0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved