ஞானசார தேரரின் நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு ஜனவரி 11 வரை தள்ளுபடி

சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தோ ஞானசார தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் எதிர் மனுவை சமர்ப்பிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஞானசார தேரரின் சட்டத்தரணிக்கு அவகாசம் வழங்கி நேற்று தீர்ப்பளித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதிக்கு முன்னர் இந்த எதிர்ப்பு மனுவை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விஜித் மலல்கொட மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் அடங்கிய  நீதிபதிகள் குழு நேற்று (18) உத்தரவிட்டுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பில், இராணுவ புலனாய்வுத் துறை அதிகாரிகள் குறித்த வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தை அவமதித்ததாக இவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எதிர் மனு தாக்கல் செய்யப் போவதாக ஞானசார தேரரின் சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு அறிவித்ததைத் தொடர்ந்து நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது. 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.