13 வயது மாணவனுடன் உறவுக்கொண்டு கர்ப்பிணியான ஆசிரியை

அமெரிக்க நாட்டில் 13 வயது மாணவனுடன் உடலுறவுக்கொண்டு கர்ப்பிணியான ஆசிரியை ஒருவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த Alexandria Vera(25) என்ற இளம்பெண் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.
இதே பள்ளியில் பெயர் வெளியிடப்படாத 13 வயது சிறுவன் ஒருவன் மாணவராக பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், மாணவனுக்கும் ஆசிரியைக்கும் இடையே இருந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி காரில் வெளியே சுற்றியுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், மாணவனின் வீட்டிற்கு சென்ற ஆசிரியை அவனுடன் உடலுறவில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு நாள் என தொடர்ந்து 9 மாதங்கள் இருவரும் உடலுறவில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
இதனால் ஆசிரியை கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து இவ்விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது.
கர்ப்பம் அடைந்ததை ஒப்புக்கொண்ட ஆசிரியை ‘நாங்கள் இருவரும் மனதார காதலிக்கிறோம்’ என கூறியுள்ளார். ஆனால், வயது குறைவான சிறுவனுடன் ஆசிரியை உடலுறவில் ஈடுப்பட்டது சட்டப்படி குற்றமாகும்.
தற்போது கர்ப்பத்தை கலைத்துள்ள ஆசிரியை நீதிமன்ற விசாரணையில் ஈடுப்பட்டு வருகிறார்.
மேலும், ஆசிரியை மீதான குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.