கல்பிட்டி கந்தக்குளி 17 வயது யுவதி கைது

ஆடம்பர வாழக்கைக்காக கொள்ளையிட்ட 17 வயதான யுவதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க பொலிஸார் நேற்று இந்த யுவதியை கைது செய்துள்ளனர்.
சுதந்திர வர்த்தக வலயத்தின் ஆடைக் கைத்தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றிய யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆடைக் கைத்தொழிற்சாலையில் பணியாற்றுவதற்கு மேலதிகமாக பகுதி நேரமாக இந்த யுவதி பிட்பொக்கட் அடித்து பணம் சம்பாதித்தள்ளார்.
இந்த யுவதி அதி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த யுவதியின் தங்குமிடத்திலிருந்து 25 பெண்களின் கைப் பைகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 11 தேசிய அடையாள அட்டைகள், 3 சாரதி அனுமதிப்பத்திரங்கள், 5 செல்லிடப் பேசிகள், ATM அட்டைகள் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன.
கல்பிட்டி கந்தக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த குருகுலசூரியகே சானிக தில்ருக்ஸி என்ற யுவதியே சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க, நீர்கொழும்பு மற்றும் அவரியாவத்தை ஆகிய பகுதிகளில் குறித்த யுவதி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
பெண்களிடமிருந்தே கொள்ளையிடப்பட்டுள்ளது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. யுவதி கொள்ளையிட்ட பணத்தை தவிர்ந்த ஏனைய பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதேவேளை, யுவதியின் ஆடம்பர வாழ்க்கை குறித்து கிடைத்த தகவல்களை அடுத்து பொலிஸார் அவர் தங்கியிருந்த இடத்தை சோதனையிட்ட போது பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.