இரு குழந்தைகளின் தாய் மாணவனுடன் ஓட்டம்

இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண், கல்லூரி மாணவனை இழுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் நெல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் – நெல்லை மாவட்டம் பேட்டை செந்தமிழ் நகரை சேர்ந்த தம்பதியினரின் மகன், ஒரு நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. சிவில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். வீட்டில் இருந்த படி அவர் தினமும் அவர் கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில், கடந்த திங்கட் கிழமையன்று கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவே இல்லை. நண்பர்கள், உறவினர்கள் என எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் பதட்டமடைந்த மாணவரின் பெற்றோர் நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவற்துறையினரின் விசாரணையில், பேட்டை, எம்.ஜி.டி நகரைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் அவர் சென்றுவிட்டார் என்பது தெரிய வந்தது.
அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 3 பேருடன் திருமணம் நடந்துள்ளது. ஒவ்வொருவரிடம் சில ஆண்டுகள் மட்டுமே குடும்பம் நடத்தும் அவர், அவ்வப்போது கணவரை மாற்றி வந்தார். அவருக்கு 2 குழந்தைகளும் இருக்கிறது.
தற்போது 4-வதாக பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவரின் பராமரிப்பில் அவர் இருந்து வந்துள்ளார்.
அந்த ஆணும் ஏற்கனவே திருமணமானவர். எனவே, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல், அவருடன் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.
அந்த நிலையில்தான், அந்த பெண், கல்லூரி மாணவரை தன்னுடைய வலையில் அவர் சிக்க வைத்துள்ளார்.
கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு, அந்த பெண்ணின் விட்டிற்கு சென்று தங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார் அந்த மாணவர்.
தற்போது அந்த மாணவனை இழுத்துக் கொண்டு அந்த பெண் தலைமறைவாகி விட்டார்.
அவரின் 2 குழந்தைகளையும் அவருடனேயே அழைத்துச் சென்றுள்ளார்.
அடிக்கடி தங்கள் இருப்பிடத்தை அவர்கள் மாற்றிக் கொண்டே இருப்பதால் அவர்களை பிடிக்க காவற்துறையினர் போராடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் நெல்லை பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.