சவூதி மரண தண்டனையிலிருந்து தப்பி வந்த ராணியை பார்க்க தலதா விஜயம்

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய கலேவெலயைச் சேர்ந்த மாணிக்கம் ராணி (29) என்ற பணிப்பெண்னை சந்திக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல நேற்று முன்தினம் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தார்.
இதன்போது குறித்த பெண்ணுக்கு வாழ்வாதாரத்துக்கு தேவையான வசதிகளையும், அவரின் வீட்டு நிர்மாணப் பணிகளையும் செய்து தருவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர்:
சவுதிக்கான இலங்கை தூதரக அதிகாரிகளின் ஒத்துழைப்பும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் வழிநடத்தலின் கீழ் குறித்த பெண்ணை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க முடியுமானதாக குறிப்பிட்டார். இதன் மூலம் இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியில் கிடைக்கப்பெற்றுள்ள அங்கீகாரம் தெளிவாகுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவரை காப்பாற்ற முடியாமல் போனதையும் அவர் இங்கு நினைவு படுத்தினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி இந்த பணிப்பெண்ணின் பாதுகாப்பில் இருந்த 9 மாதக் குழந்தை உயிரிழந்தது.
இதனை அடுத்து அவருக்கு 10 ஆண்டு காலம் சிறை தண்டனையுடன், மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
எனினும் மேன்முறையீட்டை அடுத்து அவருக்கான தண்டனை ஒன்றரையாண்டு சிறைவாசமாக குறைக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளார். 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.